ஒன்டாரியோவின் மார்கம்-யூனியன்வில்லே (Markham-Unionville) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மா (Michael Ma) ஆளும் லிபரல் கட்சியில் இணைந்ததால், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre) கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்.
இது கடந்த மாதத்தில் நோவா ஸ்கோடியா MP கிறிஸ் டி என்ட்ரேமான்ட் கட்சி மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட இரண்டாவது கட்சித் தாவலாகும்.
மைக்கேல் மா-வின் இந்த விலகலால், பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற பொதுச்சபை உறுப்பினர் பலம் 171 ஆசனங்களாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற பொதுச்சபையில் பெரும்பான்மையை அடைவதற்கு, அரசாங்கத்துக்கு இன்னும் ஓர் ஆசனம் மட்டுமே குறைவாகும்.
இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய்லீவ்ரேவின் தலைமைப் பாணி குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கட்சித் தாவலுக்கு முந்தைய நாள் இரவு மைக்கேல் மா கன்சர்வேட்டிவ் கட்சியின் கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்து கொண்டு, அக்கட்சியின் தலைவர் பொய்லீவ்ரேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
