மொண்ட்ரியல் (Greater Montréal) பிராந்தியத்தில் எதிர்காலப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை விரிவாக்குவதற்காக 8 முக்கிய
மண்டலங்களை அடையாளம் கண்டுள்ளதாக மொண்ட்ரியல் பிராந்தியப் போக்குவரத்து திட்டமிடல் முகமை (ARTM) அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த 8 மண்டலங்களின் போக்குவரத்துத் தேவைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதில் முதற்கட்ட ஆய்வாக ஷோமடே – செயிண்ட்-லோரண்ட் (Chomedey–Saint-Laurent) பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அதிக பயனளிக்கும் வகையில், மாகாண அரசாங்கத்தின் எதிர்காலப் போக்குவரத்து முதலீடுகளுக்கு வழிகாட்டுவதையும் பரிந்துரைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதல் கட்டமான ஷோமடே – செயிண்ட்-லோரண்ட் பகுதிக்கான ஆய்வு அறிக்கையின் முடிவுகள் நடப்பு ஆண்டின் இலையுதிர்காலத்தில் (Fall) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

