Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் நகருக்கு அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கியூபெக் நகருக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயிண்ட்-அகஸ்டின்-டி-டெஸ்மௌரெஸ் (Saint-Augustin-de-Desmaures) நகரசபையின் ழான்-ஜூனோ வீதியில் (Jean-Juneau Street) அமைந்திருந்ததும், 42 அலகுகளைக் கொண்டதுமான குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறிப்பிட்ட குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து கடுமையான புகையும் தீப்பிழம்புகளும் வெளியேறுவதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவசர உதவி இலக்கத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்த 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீப்பிடித்து எரிந்த வீட்டின் உள்ளே மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதலின் போது, சுயநினைவை இழந்த நிலையில் பெண் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.

மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கியூபெக் நகரின் தீயணைப்புத் துறைச் செய்தித் தொடர்பாளர் அலெக்சாண்டர் லாஜோய் (Alexandre Lajoie) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தீ விபத்தில் வேறு எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாட்டினால் தீ அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்ட போதிலும், தீ விபத்து நிகழ்ந்த இரண்டாம் தளத்து வீடு மற்றும் அதற்கு நேர் கீழே அமைந்துள்ள முதலாவது தளத்து வீடு ஆகிய இரண்டும் கடுமையான புகையினாலும் தீயினாலும் சேதமடைந்துள்ளன. இதனால், அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் மீண்டும் அங்கு தங்குவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியல் நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – ஒருவர்  படுகாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

சிறைக்குச் சென்றவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் கியூபெக் மாகாண அரசு

பிப்ரவரி 9, 2026
கனடாமுதன்மை செய்தி

உலகின் அதி நம்பிக்கையான தலைவர் பட்டியலில் பிரதமர் மார்க் கார்னி

ஜூலை 26, 2025
கனடாமுதன்மை செய்தி

காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

டிரம்பின் வரிகளுக்கு டக் போர்ட் கடுமையான பதிலடி

மார்ச் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?