Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையிலான வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தமான கஸ்மா (CUSMA) தொடர்பில் தனக்கு எந்தக் கவலையுமில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்காகக் கனடிய வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) வாஷிங்டன் சென்றுள்ள நிலையில் ட்ரம்ப்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

CUSMA ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவோ அல்லது திருத்தவோ தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ” மெக்ஸிகோவுக்கும்
கனடாவுக்குமே அமெரிக்கா தேவையாக உள்ளது. அமெரிக்காவுக்கு அவர்கள் தேவைப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் அவர்களுக்குத் தான் முக்கியமே தவிர தமக்கு அல்ல என்று ட்ரம்ப் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த அதிரடி பேச்சுக்கு மத்தியிலும், கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் மற்றும் கனடாவின் தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் ஜேனிஸ் சாரெட் (Janice Charette) ஆகியோர் வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

CUSMA ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதுடன் மட்டுமல்லாமல், எஃகு (Steel), அலுமினியம், மரத்தொழில் மற்றும் வாகன உற்பத்தித் துறைகள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதையும் நோக்கமாகக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்திருந்தார்.

கனடியப் பொருட்களுக்கு அமெரிக்காவால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரியானது எதிர்வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ள பின்னணியிலேயே, இந்த நெருக்கடியான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கில் அநேக நோயாளிகளுக்குத் தனிப்பட்ட குடும்ப வைத்தியர்கள் இல்லை
அடுத்த செய்தி மொண்ட்ரியல் பிராந்தியப் போக்குவரத்து திட்டமிடல் முகமை விடுத்துள்ள அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனேடிய மக்களுக்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோள்!

ஆகஸ்ட் 9, 2025
கனடாமுதன்மை செய்தி

கசினோ நிறுவனம் மீது 1.2 மில்லியன் டொலர் அபராதம்

செப்டம்பர் 14, 2025
கனடா

கனடாவின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் பொருளாதாரம்

ஜனவரி 2, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் வரி விதிக்க தீர்மானம் – அமெரிக்க அதிபர்

ஜூலை 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?