Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

20 நாட்களில் கடவுச்சீட்டு தாமதமானால் கட்டணம் மீள வழங்கப்படும் – கனடா அரசின் உறுதி.

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தகுதியுடைய அனைத்து வயதுவந்த பிரஜைகளும் இனி தங்களது கடவுச்சீட்டுகளை (Passport) இணையவழியில் புதுப்பித்துக்கொள்ள முடியும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் நீக்கப்பட்டு, இச்சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் லேனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) வான்கூவர் நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இப் புதிய நடைமுறையை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இப்புதிய திட்டத்தின் மூலம், கனடியப் பிரஜைகள் சேவை மையங்களுக்கு நேரடியாகச் செல்லாமலோ அல்லது ஆவணங்களை அஞ்சல் மூலம் அனுப்பாமலோ, தங்களது வீடுகளிலிருந்தவாறே இணையம் வழியாகக் கடவுச்சீட்டைப் புதுப்பிக்க விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது புதுப்பித்தல் விண்ணப்பம், அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட டிஜிட்டல்
புகைப்படம் மற்றும் கட்டணங்களை இணையத்தள போர்ட்டல் (IRCC Portal) மூலம் நேரடியாகச் சமர்ப்பிக்க முடியும்.

அத்துடன் தங்களது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையையும் உடனுக்குடன் (Real-time tracking) இணையவழியில் அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் 20 வணிக நாட்களுக்குள் (Business days) பரிசீலிக்கப்பட்டு, புதிய கடவுச்சீட்டு
விண்ணப்பதாரரின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து 30 வணிக நாட்களுக்குள் கடவுச்சீட்டு கிடைக்கப் பெறாவிடின், விண்ணப்பக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படுவதுடன், கடவுச்சீட்டும் இலவசமாக வழங்கப்படும் என்ற சேவை உத்தரவாதத்தையும் (Service guarantee) மத்திய அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர், கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்குள் முடியும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது ஏற்கனவே காலாவதியானவர்கள் மட்டுமே இணையவழியில் விண்ணப்பிக்க முடிந்தது.

மேலும், நாளொன்றுக்கு 2,000 விண்ணப்பங்கள் என்ற வரம்பும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும் மத்திய அரசாங்கத்தின் தற்போதைய அறிவிப்பின் மூலம் இந்த வரம்புகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்
அடுத்த செய்தி கியூபெக்கில் அநேக நோயாளிகளுக்குத் தனிப்பட்ட குடும்ப வைத்தியர்கள் இல்லை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாமலின் சட்டமாணி பட்டம் போலியானது – அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ!

நவம்பர் 19, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சட்டவிரோத கணிய மணல் அகழ்வு தொடர்கின்றது – டானியல் வசந்

ஏப்ரல் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

ஜூன் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பொரளை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுவனொருவர் கைது

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?