Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஜூலை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அல்பர்ட்டா மாகாண அரசு முன்மொழிந்துள்ள புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டம், பசிபிக் பெருங்கடலில் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ‘தெற்குப் பகுதி கொலையாளித் திமிங்கலங்களின்’ வாழ்வியலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சூழலியல் அமைப்புகளும் கடல்வாழ் உயிரியல் நிபுணர்களும் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

உலகில் வெறும் 74 முதல் 75 திமிங்கலங்களே எஞ்சியுள்ள நிலையில், இத்திட்டத்தினால் ஏற்படும் எண்ணெய் கசிவு ஆபத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு என்பன இந்த அரிய கடல்வாழ் உயிரினங்களை முழுமையாக அழித்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டா அரசினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், நாளொன்றுக்குச் சுமார் 10 இலட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் 1,250 கிலோமீற்றர் தூரத்திற்கு டிரான்ஸ் மவுண்டன் குழாய் வழியை ஒத்த பாதையில் கொண்டுசெல்லப்படவுள்ளது. இதற்காகப் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதிக்கு எண்ணெய் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து சாலிஷ் கடல் வழியாக ஏற்றுமதி முனையங்களுக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பப்படவுள்ளது.

இத்திட்டம் குறித்து சர்வதேசச் சூழலியல் அமைப்பான ஸ்டாண்ட்.எர்த் நிறுவனத்தின் பிரதிநிதி அன்னா பார்போர்ட் கருத்துத் தெரிவிக்கையில்,இப்பகுதியில் ஒரேயொரு எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கூட, அது தலைமுறை தலைமுறையாகக் கடல்வாழ் உயிரினங்கள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்குப் பகுதி கொலையாளித் திமிங்கலங்கள் மத்திய அரசின் ஆபத்திற்குள்ளான உயிரினங்கள் சட்டத்தின் (Species At Risk Act) கீழ் பாதுகாக்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட திட்டங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து, கூட்டாட்சி அரசு பரிசீலித்து வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி ஏறாவூர் வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம்
அடுத்த செய்தி 20 நாட்களில் கடவுச்சீட்டு தாமதமானால் கட்டணம் மீள வழங்கப்படும் – கனடா அரசின் உறுதி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்க வரிவிதிப்பை மார்க் கார்னி பிரசாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வதாக கன்சர்வேட்டிவ் கட்சி விமர்சனம்!

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மார்ச் 26, 2026
கனடா

மார்க்கம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையவருக்கு பிடிவிராந்து உத்தரவு!

ஆகஸ்ட் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?