Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஜூலை 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்
Construction continues on the Gordie Howe International Bridge, in Windsor, Ont., on Tuesday, Feb. 10, 2026. THE CANADIAN PRESS/Dax Melmer
SHARE

ஒன்டாரியோவின் வின்ட்சர் (Windsor) நகரையும் அமெரிக்காவின் டெட்ராய்ட் (Detroit) நகரையும் இணைக்கும் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘கோர்டி ஹோவ்’ (Gordie Howe) சர்வதேசப் பாலத்தைத் திறப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் எட்டப்பட்ட சர்ச்சைக்குரிய
உடன்படிக்கையின் அதிகாரப்பூர்வ ஆவணப் பிரதியை கனேடிய மத்திய அரசாங்கம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) முன்னர் தெரிவித்த விளக்கங்களுக்கு மாறாக, இந்த உடன்படிக்கை அமைந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “கொள்கையளவிலான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம்” (Proposed Agreement in Principle) எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின்படி, பாலம் திறக்கப்பட்டு முதல் 15 ஆண்டுகளுக்கு, பாலத்தின் மூலம் கிடைக்கும் நிகர வருவாயில் பாதியை அமெரிக்க அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பிராந்திய பொருளாதார மேம்பாட்டு நிதியத்திற்கு கனடா வழங்க வேண்டும்.

கனடா சுமார் $6.4 பில்லியன் கனேடிய டொலர் செலவில் முழுமையாக நிதி வழங்கி இந்தப் பாலத்தைக் கட்டியெழுப்பியது. பாலத்தைக் கட்டுவதற்கு கனடா செய்த முழுச் செலவும் கட்டண வருவாய் (Toll Revenue) மூலம் மீண்டும் ஈட்டப்பட்ட பிறகே, அமெரிக்காவுடன் இலாபம் பகிரப்படும் என பிரதமர் மார்க் கார்னி முன்னர் உறுதியளித்திருந்தார்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒப்பந்த உரையில், கனடா வழங்கிய கடன் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்தோ அல்லது கடன் அடைப்பு குறித்தோ எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, பாலத்தின் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் கழித்த
பின்னரான மொத்த வருவாயில் பாதியை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre), “நாட்டின் கடன் தொகை அடைக்கப்பட்ட பின்னரே
வருவாய் பகிரப்படும் எனக்கூறிய பிரதமர் கார்னியின் வாக்குறுதி முற்றிலும் பொய்யாகியுள்ளது” எனச் சாடியுள்ளார்.

இதனிடையே, கனேடியப் பொருட்கள் மீது புதிதாக 50 சதவீத வரியைச் சுமத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்துவதாக இருந்த பாலத்தின் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புத் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

“அமெரிக்காவின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் இணைந்து ஒரு கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது” என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கள்கிழமை முதல், கோர்டி ஹோவ் பாலம் பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறந்துவிடப்படவுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஜூன் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

பிப்ரவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி

பிப்ரவரி 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?