நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவான உயிரிழப்பு எண்ணிக்கை கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 68 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலில் 35 பேரும் அனர்த்தம் காரணமாக இதுவரை காணாமல் போயுள்ளனர்.
