தேசிய பனிஹொக்கி லீக்கின் (NHL) வரலாற்றுச் சாதனையாளருமான, குளோட் லெமிவுக் (Claude Lemieux) கடந்த வாரம் காலமானதைத் தொடர்ந்து, அவரது மூளையை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குளோட் லெமிவுக் (Claude Lemieux), மொன்றியல் கனடியன்ஸ் (Montreal Canadiens) அணியின் முன்னாள் வீரர் ஆவார்.
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான தலைக்காயங்கள் மற்றும் மூளை அதிர்ச்சிகளின் நீண்டகாலப் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக இந்த அசாதாரண முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மூளைப்பகுதியானது, அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘யுனைட் பிரைன் பேங்க்’ (UNITE Brain Bank) ஆராய்ச்சி மையத்திற்குத் தானமாக வழங்கப்படுவதாக குளோட் லெமிவுக்கின் மகள் கிளாடியா லெமிவுக் பிஷப் (Claudia Lemieux Bishop) மற்றும் மகன் பிரெண்டன் லெமிவுக் ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
