Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மொன்றியல் கூடைப்பந்து பயிற்சியார்

ஏப்ரல் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மொன்றியலைச் சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து பயிற்சியாளர் ரொபர்ட் லூ (Robert Luu)- விற்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செயிண்ட்-லாரன்ட் (Saint-Laurent) உயர்நிலைப் பள்ளியில் பயிற்சியாளராகப் பணியாற்றிய ரொபர்ட் லூ, 12 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மொன்றியல் நீதிமன்றத்தில் நேற்று முடிவுக்கு வந்தது.

நீதிபதி பாட்ரிசியா காம்பாக்னோன் (Justice Patricia Compagnone), குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். (பாதிக்கப்பட்ட இளம்பெண்) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், தனது பதின்ம வயதின் தொடக்கத்தில் நடந்த இந்த கொடூரச் செயல் தனது அடையாளத்தையும், மற்றவர்களுடனான உறவுகளையும் சிதைத்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ரொபர்ட் லூ, அந்தச் சிறுமிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, அவருக்கு மருத்துவ உதவி செய்வது போலவும், நலம் விரும்பி போலவும் நடித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி 12 வயது முதல் 15 வயது வரை அச்சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்களை அளித்துள்ளார்.

இதேவேளை, இதே பள்ளியைச் சேர்ந்த மற்றுமொரு பயிற்சியாளரான சார்லஸ் சேவியர் போய்சிலார்ட் (Charles Xavier Boislard) என்பவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளியின் விளையாட்டுத் துறை சரியாகக் கண்காணிக்கப்படாததே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் என கல்வி அமைச்சின் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஷபேகா டெய்லர் (Shabeka Taylor), பள்ளி நிர்வாகத்திடம் 3.2 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற எச்சரிக்கையை இந்தத் தீர்ப்பு விடுத்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி செயிண்ட் கத்தரீன் பகுதி வணிகர்கள் மொன்றியல் மாநகர சபையிடம் விடுத்துள்ள கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின்அடுத்த ‘தலைமை விஞ்ஞானியாக பேராசிரியர் ஜெரோம் டுப்ராஸ் நியமிப்பு

மே 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வேலையிழந்து நிர்க்கதியில் நிற்கும் மெக்சிகோ தொழிலாளர்கள்

பிப்ரவரி 2, 2026
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் வர்த்தகக் கட்டுப்பாடுகளில் தளர்வு

மார்ச் 5, 2026
கியூபெக்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு-பாதிரியார் மொன்றியலுக்குள் நுழைவதற்கு தடை!

ஜனவரி 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?