கியூபெக் மாகாணத்தில் வாழும் நூறு மில்லியனுக்கும் அதிகமான ஆங்கிலம் பேசும் (Anglophone) மக்களுடன் கனிவான மற்றும் இணக்கமானதொரு புதிய அணுகுமுறையைக் கையாளத் தான் விரும்புவதாகக் கியூபெக்கின் புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்பு சட்டங்களினால் மாகாண அரசுக்கும் ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினருக்கும் இடையே நீண்டகாலமாக அரசியல் பதற்றம் நிலவி வருகின்றது.
அந்த அரசியல் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட், மொன்றியல் வணிகச் சபையில் உரை நிகழ்த்தினார்.
கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது தனது முதன்மைப் பொறுப்பு என்ற போதும் கூட, தாம் ஆங்கிலம் பேசும் (Anglophone) மக்களுடன் இவ்வாறானதொரு இணக்க அணுகுமுறையைக் கையாள விரும்புவதாக, அந்த உரையில் முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, அண்மையில் ஆளும் ‘கொஅலிஷன் அவினீர் கியூபெக்’ (CAQ) கட்சியின் தலைவராகவும், மாகாணத்தின் இரண்டாவது பெண் முதல்வராகவும் பதவியேற்ற கிறிஸ்டின் பிரெஷெட், ஆங்கிலேயச் சமூகத்தை நோக்கி நீட்டியுள்ள சமாதானக் கரமாக, இந்த உரை பார்க்கப்படுகிறது.

