Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொன்கோர்டியா பல்கலைக்கழகம் (Concordia University) கடுமையான நிதி நெருக்கடியில்  உள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆனது, ஊழியர்களைக் கட்டாயப் பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், சில கல்வித்  திட்டங்களைக்  குறைக்கவுள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் திணைக்களங்களிலும் 6 சதவீத நிதிக் குறைப்புக்களைச் செய்த போதிலும், வரவிருக்கும் 2026-27 நிதியாண்டில் சுமார் 20.7 மில்லியன் டொலர் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை (Deficit) எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தின் தலைவர் கிரஹாம் கார் (Graham Carr) ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட சுற்றறிக்கையில்  இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிதிப் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமாயின், வேறு வழியின்றி, பணிநீக்கங்களை அரங்கேற்ற வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தின் வருவாய் திடீரென வீழ்ச்சியடைந்து, நிர்வாகச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதே, இந்த நிதி நெருக்கடிக்கு முதன்மைக் காரணியாகக் கூறப்படுகிறது.

முந்தைய செய்தி லாவல் மாநகர நிர்வாகத்திற்கு ஒட்டாவா மத்திய அரசு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி அல்பெர்ட்டா சுதந்திர நாடாக மாறுவது தொடர்பான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

Air Canada ஊதிய சலுகைக்கு எதிராக விமான பணிப்பெண்கள் வாக்களிப்பு!

செப்டம்பர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

ஹைட்ரோ மின்சார நிறுவனத்தின் தற்போதைய நிலை

ஏப்ரல் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் முதல்வரின் அரசாங்கம், விவாதம் கடுமையென விமர்சனம்!

நவம்பர் 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

பிரெஞ்சு மொழிக்காக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க வேண்டாம்

மே 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?