Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

லாவல் மாநகர நிர்வாகத்திற்கு ஒட்டாவா மத்திய அரசு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா வருவாய் முகவரகத்துக்கு சுமார் 1 மில்லியன் டொலர் நிலுவை வரியைச் செலுத்துமாறு தற்போதைய லாவல் மாநகர நிர்வாகத்திற்கு, ஒட்டாவா மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லாவல் (Laval) மாநகர சபையின் முன்னாள் மேயர் கில்ஸ் வைலன்கோர்ட் (Gilles Vaillancourt) கையாடல் செய்ததாகக் கூறப்படும் பணம்தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மேயர் கில்ஸ் வைலன்கோர்ட் தனது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் கைப்பற்றியிருந்த, சுவிஸ் வங்கிக் கணக்கில் மறைத்து வைத்திருந்த 7 மில்லியன் டொலர் பொதுப் பணத்தை கடந்த 2016ஆம் ஆண்டு நீதிமன்ற உடன்படிக்கையின் கீழ், லாவல் மாநகர சபையிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்தப் பணம் தற்போது மீண்டும் மாநகர சபையின் வசம் உள்ளதால், அதற்குரிய மத்திய வருமான வரியையும் அதற்கான வட்டியையும் லாவல் மாநகரமே செலுத்த வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தி வருகின்றது.

இந்த நடவடிக்கை கனேடிய அரசியல் மற்றும் நகராட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு லாவல் மாநகரத்தின் தற்போதைய மேயர் ஸ்டீபன் போயர் (Stéphane Boyer) தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட லாவல் நகர மக்களிடமிருந்தே மீண்டும் வரி வசூலிக்க மத்திய அரசு முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முன்னாள் மேயரிடமிருந்து மீட்கப்பட்ட 7 மில்லியன் டொலர் நிதியானது, லாவல் நகரின் மிகவும் பின்தங்கிய ஏழைகள் வாழும் பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வருவாய் முகவரகத்தின் இந்த வரிக்கோரிக்கைக்கு எதிராக, லாவல் மாநகர சபை உத்தியோகபூர்வமாக மேல்முறையீடு செய்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியல் கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒட்டாவாவில் முடக்கப்பட்டது கிங்ஸ்டன் படகுப் போக்குவரத்து!

டிசம்பர் 24, 2025
கனடா

அமெரிக்காவின் 51வது மாநிலம் கனடா என்ற ‘அபத்தமான சொல்லாட்சியை விடவேண்டும் – கனடிய கால்பந்து பயிற்சிவிப்பார்  மார்ஷ்

பிப்ரவரி 26, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்களின் அமெரிக்கப் பயணங்கள் ரத்து….

ஏப்ரல் 17, 2025
கனடா

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?