Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஒண்டாரியோ அரசால் வாங்கப்பட்ட சொகுசு விமானம்

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒண்டாரியோ மாகாண அரசு வாங்கிய 28.9 மில்லியன் டொலர் பெறுமதியான புதிய சொகுசு விமானம், அதே மாகாணத்திலுள்ள 90 சதவீத விமான நிலையங்களில் தரையிறங்க முடியாத ஒன்று என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வடக்கு ஒண்டாரியோ மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு விரைவாகச்
செல்வதற்காக இந்த விமானம் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப ரீதியாக இது அந்தப் பகுதிகளுக்குப் பயன்படாது எனத் தெரியவந்துள்ளது.

ஊடக நிறுவனமொன்று நடத்திய ஆய்வில், இந்த பம்பார்டியர் சேலஞ்சர் 650 (Bombardier Challenger 650) ரக விமானம் குறித்த உண்மைகள் தெரியவந்துள்ளன.

வடக்கு ஒண்டாரியோவில் உள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் சிறியவை மற்றும் மண்தரையான (Gravel) ஓடுதளங்களைக் கொண்டவை. ஆனால், இந்த பாரிய சொகுசு விமானம் தரையிறங்குவதற்கு மிக நீண்ட மற்றும் கொங்கிரீட் இடப்பட்ட ஓடுதளங்கள் அவசியமாகும்.

ஒண்டாரியோவில் உள்ள மொத்த விமான நிலையங்களில் வெறும் 10 சதவீத இடங்களுக்கு மட்டுமே இந்த விமானம் செல்ல முடியும் என்ற நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரொறன்ரோ, ஒட்டாவா போன்ற பெரிய நகரங்களைத் தவிர மற்ற இடங்களுக்கு இது செல்ல முடியாது என, அந்த ஊடக நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒண்டாரியோ மாகாணத்தின் பின்தங்கிய பகுதி மக்களையும் பழங்குடியின மக்களையும் சந்திப்பதற்காகவே இந்த விமானம் வாங்கப்பட்டது என்ற, அந்த மாகாண அரசின் வாதம் தற்போது பொய்யாகியுள்ளது.

முதலமைச்சர் வடக்கு ஒண்டாரியோவிற்குச் செல்ல விரும்பினால், அவர் சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்தச் சொகுசு விமானம் அவருக்கு ஒரு ஆடம்பரப் பொம்மைமட்டுமே எனவும், ஒண்டாரியோவின் எதிர்க்கட்சித் தலைவர் மாரித் ஸ்டைல்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தத் தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, விமானத்தை விற்கும் முடிவில் மாற்றம் இல்லை என முதலமைச்சர் டக் ஃபோர்ட் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி உயர்தரத்தில் சாதனை: முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த 31 மாணவர்கள் கௌரவிப்பு.
அடுத்த செய்தி கியூபெக்கில் அதிகரித்து வரும் குடும்ப வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

லெபனான் எல்லையில் பணியாற்றும் கனடியப் படையினருக்கு பாதிப்பில்லை – பாதுகாப்பு அமைச்சு

மார்ச் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

பொலிஸாரால் ரொறன்ரோ பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….

பிப்ரவரி 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபேக் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டம்

செப்டம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முக்கிய தகவல்!

ஆகஸ்ட் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?