Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஐந்தாண்டிற்குள் அபிவிருத்தியடையவுள்ள யாழ்.நகர்

ஏப்ரல் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டிற்குள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 10 நகரங்களை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்திற்கு அமைய – வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

அதில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

யாழ் நகரை இவ்வாண்டிலிருந்து 05 ஆண்டு திட்டத்திற்கமைய அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, முதல் கட்டமாக இவ்வாண்டு 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பழைய பேரூந்து நிலையம் தொடர்பாகவும், யாழ் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றலில் உள்ள பிரச்சனை தொடர்பாகவும் இதற்கான முன்மொழிவுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்புடன் விரிவாக ஆராயப்பட்டது.

அதேவேளை போக்குவரத்து சேவைகளை இலகுபடுத்த யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை (Metro Bus) வழங்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் உறுதியளித்தார்.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், மேலதிக செயலர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதான ஆதீனத்தில் திருவுருவ சிலை
அடுத்த செய்தி பிராம்டன் நகரில், பொலிஸ் அஜாக்கிரதையால் ஈழ தமிழன் மரணம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சிவில் திணைக்கள பண்ணையில் சட்ட விரோத குளம்!

டிசம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் உணவக முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டணை!

ஜூன் 6, 2025
இலங்கை

3000வது நாளாக தொடரும் போராட்டம்.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு கேப்பாப்புலவு- பிலவுக்குடியிருப்பில் சந்திரன் நகர வீடுகள் மக்களிடம் கையளிப்பு!

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?