கனடாவின் பிராம்டன் நகரில் திடீர் சுகவீனம் காரணமாக வீதிக் கரையில் விழுந்த முப்பது வயது இளைஞர், சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னரே தனது கனேடிய பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்ட ரெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி என்ற இந்த இளைஞர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்தவராவார்.
குறித்த இளைஞர் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் என்றும், இவர் விரைவில் இலங்கைக்கு பயணமாகி, தனது தாய், சகோதரர்கள் மற்றும் திருமணத்திட்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பெண்ணையும் சந்திக்க ஆவலாக இருந்த வேளையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்தவரின் மரணத்திட்கு பீல் பிராந்திய பொலிஸாரும் காரணம் என தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி மாலை 4 மணிக்கு 4.30 இற்க்கிடையில் , இந்த இளைஞர் பிராம்டன் வீதியில் சாதாரணமாக நடந்து வந்த காட்சி வீதிக் கமராவில் பதிவாகியுள்ளது.
