இஸ்ரேல் நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மொன்றியல் நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பிரம்மாண்டமான பேரணி மற்றும் கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர்.
‘பிளேஸ் டு கனடா’ (Place du Canada) சதுக்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மொன்றியல் வாழ் யூத சமூகத்தின் ஒற்றுமையையும் இஸ்ரேல் மீதான அவர்களது ஆதரவையும் பறைசாற்றுவதாக அமைந்தது.
இன்று காலை 10:45 மணியளவில் தொடங்கிய இந்த 24-வது ஆண்டு விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன
மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் இஸ்ரேலியக் கொடிகளை ஏந்தியபடி பாடல்கள் பாடியும் நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இஸ்ரேல் ஒரு வலுவான தேசமாகத் திகழ்வதை இந்தப் பேரணி உறுதிப்படுத்துவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, இஸ்ரேலிய ஆதரவாளர்கள் திரண்டிருந்த இடத்திற்கு எதிரே உள்ள டோமினியன் சதுக்கத்தில் (Dominion Square) பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
