மொண்ட்ரியல் நகரத்தில் உள்ள ”சென்டர் டெஸ் மெமோயர்ஸ் மொண்ட்ரியாலீஸ்” (Centre des mémoires montréalaises – MEM) அருங்காட்சியகத்தில், “பாலியல் தொழிலாளர்களின் 30 ஆண்டு கால எதிர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு புதிய கண்காட்சிப்பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான போராட்டம் மற்றும் சமூக நீதி இயக்கங்களில் அவர்களின் நீண்ட கால பங்களிப்பை, இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது.
இந்தக் கண்காட்சி, ஸ்டெல்லா, ல’அமி டெ மைமி (Stella, l’amie de Maimie) என்ற பாலியல் தொழிலாளர்களுக்கான ஆதரவுக் குழுவின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதற்காகவும், அதே நேரத்தில் எய்ட்ஸ், ஏழ்மை எதிர்ப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போன்ற பரந்த சமூகப் போராட்டங்களிலும் எவ்வாறு பங்கேற்றுள்ளனர் என்பதை இந்தக் கண்காட்சி விவரிக்கிறது.
