Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சலீம் துவைபிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் – அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் 15 வயது சிறுமி மீரியம் பௌண்டாவ் (Meriem Boundaoui) சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியான சலீம் துவைபிக்கு (Salim Touaibi) மேலும் நான்கு ஆயுள் தண்டனைகளை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

இந்தத் தண்டனை விசாரணை இன்று மொன்றியல் நீதிமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மொன்றியலின் செயின்ட் லியோனார்ட் பகுதியில் வாகனத்தில் அமர்ந்திருந்த மீரியம், அவ்வழியே வந்த காரிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில், சலீம் துவைபி முதல்நிலை கொலைக் குற்றவாளி (First-degree murder) என அறிவிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு ஏற்கனவே 25 ஆண்டுகள் பிணையில் வர முடியாத ஆயுள் தண்டனை உறுதியாகியுள்ளது.

கொலைக் குற்றத்தைத் தவிர, அங்கிருந்த மற்ற நால்வரை நோக்கிச் சுட்டதற்காக கொலை முயற்சி (Attempted murder) குற்றச்சாட்டுகளும் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்காகவே தற்போது அரசுத் தரப்பு சலீம் துவைபிக்கு மேலதிக ஆயுள் தண்டனைகளை அளிக்க வேண்டுமெனக் கோரி வருகிறது.

மொன்றியல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இன்றைய விசாரணையில் மீரியத்தின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் லாவால் பகுதியில் வீதியில் தனியாகத் திரிந்த இரண்டு வயது சிறுவன்
அடுத்த செய்தி மொன்றியல் யூத பொது வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு மூடப்படும் அபாயம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடங்கள் அமைப்பதில் சிக்கல்

ஜூலை 4, 2025
கியூபெக்முதன்மை செய்தி

நாட்டின் ஒரு பகுதியைத் தனிநாடாக அறிவிக்க “தெளிவான பெரும்பான்மை”அவசியம் – மார்க் கார்னி

ஏப்ரல் 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலின் பிரதான பாலத்தில் போக்குவரத்து பிரச்சினை

நவம்பர் 29, 2025
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சியின் புதிய தலைவராக சார்லஸ் மில்லியார்ட் பொறுப்பேற்பு

பிப்ரவரி 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?