Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கின் லாவால் பகுதியில் வீதியில் தனியாகத் திரிந்த இரண்டு வயது சிறுவன்

ஏப்ரல் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கின் லாவால் (Laval) பகுதியில் உள்ள தனியார் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து இரண்டு வயது சிறுவன் ஒருவன் தப்பிச் சென்று, வீதியில் தனியாகத் திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டி ஒருவரால் அச்சிறுவன் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாவால் நகரின் சோமெடி (Chomedey) பகுதியில் உள்ள ஒரு வீதியில், சிறுவன் ஒருவன் மிகவும் குழப்பத்துடன் தனியாக நிற்பதை மரியா சந்தினோ என்ற பெண்மணி கவனித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் விபத்து ஏதும் நடப்பதற்கு முன்னதாகவே, மரியா தனது வாகனத்தை நிறுத்தி சிறுவனை மீட்டுள்ளார்.பின்னர் அவர் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுவன் அருகில் உள்ள ஒரு வீட்டில் இயங்கி வரும் தனியார் காப்பகத்திலிருந்து (Home Daycare) தப்பி வந்தமை தெரியவந்தது.

காப்பகத்தின் பின் கதவு பூட்டப்படாமல் இருந்ததைப் பயன்படுத்தி அச்சிறுவன் அங்கிருந்து வெளியேறியுள்ளான். பொலிஸார் சிறுவனுடன் காப்பகத்தினைத் தொடர்புகொள்ளும்வரை ஒரு குழந்தை காணாமல் போன விபரமே அங்குள்ள ஊழியருக்குத் தெரியவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது அங்கீகாரம் பெறாத (Unlicensed) ஆனால் சட்டப்பூர்வமாக இயங்க அனுமதிக்கப்பட்ட ஒரு சிறிய இல்லக் காப்பகம் எனவும் கியூபெக் சட்டப்படி இத்தகைய காப்பகங்களில் 6 குழந்தைகளுக்குக் குறைவாகவே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சிறுவர் காப்பகத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி சலீம் துவைபிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் – அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் மற்றும் டெர்ரெபோன்னில் நூற்றுக்கணக்கான வாடகை வீடுகளை அமைக்க லிபெரல் அரசு திட்டம்..!!

மார்ச் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

20வது ஆண்டு நிறைவை  கொண்டாடிய  ‘கியூபெக் சொலிடேர்’ கட்சி

பிப்ரவரி 27, 2026
கியூபெக்

மொன்றியலிலுள்ள மெர்சியர் தீவுக்கான (Île Mercier) பாலம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது

ஏப்ரல் 21, 2026
கியூபெக்

கியூபெக் மாகாண அரசுக்கு எதிராகச் சட்டப் போராட்டத்தை அறிவித்துள்ள அமைப்புகள்

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?