Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அமுலுக்கு வந்த அதிரடி சட்டம் – ‘C-12 ’19ஆயிரம் அகதி விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

மார்ச் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு முறையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் C-12சட்டமூலம் (Bill C-12)  உத்தியோகபூர்வமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

கடந்த பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான இந்தச் சீர்திருத்தம், அகதித் தஞ்சக் கோரிக்கைகளுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுடன், விசாக்களை இரத்து செய்யும் அதீத அதிகாரத்தை மத்திய அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

இந்தச் சட்டத்தின்படி, அகதித் தஞ்சம் கோருபவர்களுக்குப் புதிய ஓராண்டு விதி நடைமுறைக்கு வந்துள்ளது. கனடாவிற்குள் நுழைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தஞ்சம்
கோராதவர்கள், இனிமேல் அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாது என அறிவிகப்பட்டுள்ளது.

இந்த விதி 2020-ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு (Retroactive) அமல்படுத்தப்படுவதால், சுமார் 19,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ எல்லைச் சாவடிகள் அன்றி, மற்றைய வழிகளில் கனடாவுக்குள் நுழைபவர்கள் 14 நாட்களுக்குள் தஞ்சம் கோர வேண்டும் எனவும் இல்லையெனில் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Bill C-12 எனப்படும் இந்த புதிய சட்டத்தின் மூலம், பொது நலன் அல்லது தேசியப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி விசாக்களை இரத்து செய்யும் அல்லது இடைநிறுத்தும் அதிகாரம் ஆனது, மத்திய அரசின் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளை இது பறிப்பதாகவும், சித்திரவதைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்பும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2026-ஆம் ஆண்டிற்குள் 5 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயற்படுத்தவுள்ள இந்த Bill C-12 சட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் மற்றும் பிளக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சிகளும் வாக்களித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி ஐரோப்பிய நாடுகளை கடுமையாக சாடும் டொனால்ட் ட்ரம்ப்
அடுத்த செய்தி காத்திருப்பு பட்டியல் ‘மரண பட்டியல்’ஆனது எப்படி? கியூபெக்கில் அதிர்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் நகர் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் ஜெஸ்ஸி வான் ரூட்சலருக்கு தொடர்பு

பிப்ரவரி 12, 2026
உலகம்முதன்மை செய்தி

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பல்கலைகழக மாணவி.

டிசம்பர் 26, 2024
கனடாமுதன்மை செய்தி

பறக்கத் தடைசெய்யப்பட்ட வான் வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிவில் விமானம்

ஜூன் 16, 2025
கனடா

கனேடிய மக்களுக்கு பொலிஸார் விடுத்த வேண்டுகோள்!

ஆகஸ்ட் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?