அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது ஹோர்முஸ் பிரச்சினையால் எரிபொருள் தட்டுப்பாடு ஏட்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் பெற்றுக் கொள்ள நினைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு இரண்டு வழிகள் உள்ளது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்காவிடம் எரிபொருள் நிறையவுள்ளது. அமெரிக்காவிடம் எரிபொருளை பெற்றுக் கொள்ளுங்கள், அப்படி இல்லையென்றால் ஹோர்முஸ் நீரிணைக்கு சென்று எரிபொருளுக்காக சண்டையிடுங்கள் என்று தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
