Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

புதிய சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசு

மார்ச் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், தேர்தல் காலங்களில் வெளிநாடுகளின் தேவையற்ற தலையீடுகளை முறியடிக்கவும் மத்திய அரசு புதிய சட்டச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

கடந்த 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் நிகழ்ந்த பொதுத்தேர்தல்களின் போது, சில வெளிநாடுகள் இரகசியமாகத் தாக்கத்தைச் செலுத்த முயன்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் பட்சத்தில், தேர்தல் ஆணையாளர் இனி சந்தேகத்திற்குரிய அமைப்புகளின் நிதி விபரங்களை ஆய்வு செய்யவும், சாட்சியங்களைக் கட்டாயமாகப் பெறவும் அதிகாரம் பெறவுள்ளார்.

அத்துடன், தேர்தல் விளம்பரங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்குப் பூரணத் தடை விதிக்கப்படுடும் நிலையும் ஏற்படவுள்ளது. அரசியல் விளம்பரங்களை யார் வழங்குகிறார்கள் மற்றும் அதற்காக எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்ற விபரங்களை, சமூக ஊடகங்கள் பகிரங்கமாக வெளியிட வேண்டிய கட்டாயச் சூழலும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்தை வரவேற்றாலும், நாட்டின் தேர்தல்களில் தலையீடு செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவது போன்ற இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்தச் சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் குழுநிலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி சர்வதேசக் கூட்டுப் படையில் அதிகாரப்பூர்வமாக இணைந்த கனடா
அடுத்த செய்தி நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கனேடிய விமானிகளின் உடல்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

வாட்டர்லூ பிராந்தியம் எதிர்கொள்ளப்போகும் மூன்று முக்கிய சவால்கள்

ஜனவரி 2, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

ஃபிரான்டனாக்கில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை

ஜூலை 17, 2025
கனடாமுதன்மை செய்தி

பவ்னெஸ்ஸில் “பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கையால் பெரும் மாற்றம்

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?