அமெரிக்க வாகன நிறுவனத்திற்கு எதிராக கனடாவில் பதிவான மிகப்பெரிய கார் சேதம் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கார்களில்”ஆழமான கீறல்கள் மற்றும் டயர்கள் பஞ்சர் செய்யப்பட்டும் சேதம் விளைவிக்கப்ட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
கனடா மற்றும் அமெரிக்க நகரங்களில், டெஸ்லா வாகனங்கள் மற்றும் டீலர்ஷிப்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கை அமெரிக்க அரசாங்கத் துறையின் மேற்பார்வைக்கு நியமித்ததிலிருந்து, அரசாங்க செலவினங்களையும் திட்டங்களையும் எலன் மாஸ்க் குறைத்து வருகிறார்.

ஒன்ராறியோவின் லண்டனில், உள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் டெஸ்லா S மாடல் கார் தீப்பிடித்து எரிந்தது இது சந்தேகத்திற்கிடமான தீ விபத்து என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, எனவும் ர் $140,000 சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதே வேளை நேற்று புதன்கிழமை, மொன்றியலில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப்பின் வெளிப்புறத்தில் ஸ்ப்ரே பெயிண்ட் செய்ததற்காக இரண்டு பேரை மொன்றியல் போலீசார் கைது செய்தனர். என்பதும் குறிப்பித்தக்கது.

