மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் இன்று சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்
விமானத்தில் பயணித்த விமானிகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.