தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பிலான முடிவு இன்று அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் குறித்த சங்கமானது, பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
