பிரிட்டிஷ் கொலம்பியா அரசு, புதிய எரிவாயு பைப்லைன் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பைப்லைன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு கடற்கரைக்கு அப்பால் அமையவுள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி முனையத்திற்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்க உள்ளது.
இந்தத் திட்டம் நிஸ்கா நாஷன் (Nisga’a Nation) மற்றும் டெக்சாஸை தளமாகக் கொண்ட வெஸ்டர்ன் LNG (Western LNG) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.
பிரின்ஸ் ரூபர்ட் எரிவாயு பரிமாற்றத் திட்டம் சுமார் 900 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு பைப்லைனை உள்ளடக்கியது.
முதலில் ஹட்சன்’ஸ் ஹோப் (Hudson’s Hope) முதல் பிரின்ஸ் ரூபர்ட்டுக்கு அருகிலுள்ள லெலு தீவு (Lelu Island) வரை அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், புதுப்பிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் கரிபோ (caribou) வாழ்விடங்களைத் தவிர்ப்பதற்காக இந்தப் பைப்லைன் செட்விண்டில் (Chetwynd) இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது, பிரின்ஸ் ரூபர்ட் துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 82 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பியர்ஸ் தீவில் (Pearse Island) உள்ள வில் மிலிட் (Wil Milit) என்ற மாற்று முனையத்தில் முடிவடையும் என்றும் தவல்கள் கூறுகின்றன.
