டரம் (Durham) பிராந்தியத்தில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நிகழ்ந்து வந்த தொடர் திருட்டுகளைத் தடுக்க, ‘டரம் பிராந்திய காவல்துறையினர்’ நடத்திய அதிரடி சோதனையில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“சேஃப் ஷாப்” (Safe Shop) எனப் பெயரிடப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் மொத்தம் 155 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை ஐந்து வாரங்கள் நீடித்த இந்தத் தேடுதல் நடவடிக்கையானது, பண்டிகை காலக் கூட்டத்தைப் பயன்படுத்தி நடக்கும் திருட்டுகளைத் தடுப்பதற்காகத் திட்டமிடப்பட்டது.
இந்தச் சிறப்புப் படை நடவடிக்கையில், ‘டரம் பிராந்திய காவல்துறையினருடன் பல்வேறு துறையினரும் இணைந்து செயல்பட்டனர்.
இந்த ஐந்து வாரச் சிறப்புத் திட்டம் முடிவுக்கு வந்தாலும், முக்கியமான வணிகப் பகுதிகளில் காவல்துறையினரின் கண்காணிப்பு தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
