Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video)

டிசம்பர் 29, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 21.12.2025 அன்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசிக்கும் குகநேசன் டினோயா எனும் 13 வயது சிறுமி சாதாரண உணவு ஒவ்வாமை காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.

குறித்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரியும், இனியும் இவ்வாறானதொரு இழப்பு ஏற்படாதிருக்கவும் முல்லைத்தீவு மக்கள் சமூகத்தினரால் இன்றையதினம் (29.12.2025) காலை 10 மணியளவில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
.
இந்த போராட்டத்தில் டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர், தாதியர்களுக்கு அரசசேவையில் தொடர அனுமதியளித்துள்ளீர்களா? இவ்வாறாக நீதிநெறிமுறைக்கு முரணாக செயற்படும் வைத்தியர்கள், தாதியர்களுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல நூற்றுக்ககணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாதாரண ஒவ்வமைக்காக நடந்து வந்த உன்னை நடைப்பிணமாக மாற்றினார்கள். பைத்தியமா? வைத்தியமா?எங்கே அந்த கொலைகாரர்கள்.? நீதி வேண்டும், ஒன்றாக சந்தோசமாக வாழும் நாட்டில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இவ்வாறான சதிவேலைகளை செய்து ஏன் மக்களை ஏமாற்றுகின்றீர்கள்? ஒன்றோ இரண்டோ பிழைகளை விடுகின்றீர்கள்?

ஏன் மக்களை ஏமாற்றுகின்றீர்கள்? நீதி பெறும் வரை எங்கள் குரல் ஓயாது?சிறுமியின் கனவுகள் மருத்துவ அலட்சியத்தால் முடிந்ததா? ஊழலற்ற அரசாங்கத்தில் ஊழல் நிறைந்த சிகிச்சை முறையை கொடுக்கவேண்டாம்?உயிரை காக்க வேண்டிய கைகள் உயிரை வாங்கலாமா? என்ற கோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், பிரதேசசபை தபிசாளர் ,உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள் , சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் , பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிற்கான மகஜர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களினால் கையளிக்கப்பட்டிருந்தது.

முந்தைய செய்தி டர்ஹம் பிராந்தியத்தில் 64 பேர் கைது
அடுத்த செய்தி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவு

மே 22, 2026
அண்மைய செய்திகள்கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் நிலநடுக்கம்,,,,

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொமோண்டோ பங்களா முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மே 1, 2026
1
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்…

ஏப்ரல் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?