கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 88 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதிய உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின் போது ஜூலை 2024 இல் முதன்முதலில் இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு மேலதிக நீதிபதி கசுன் காஞ்சன திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா வழங்கிய தொல்பொருள் நிபுணத்துவத்துடன் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
