நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் யோஷித ராஜபக்சவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிதிமோசடி குற்றச்சாட்டின் பெயரில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த சனிக்கிழமை (25) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.