மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் வீதியைவிட்டு விலகிய வான் மின்சாரத் தூணுடன் மோதிய விபத்தில் மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததுடன் வேன் பலத்த சேதமடைந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் சம்பவதினமான நேற்று இரவு 8.00 மணிக்கு வேகமாக பிரயாணித்த வேன் வேககட்டுப்பாட்டை மீறி வீதியைவிட்டு விலகி மின்சாரதூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மின்சாரதூண் உடைந்து வீழந்ததையடுத்து அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.