உத்தியோகபூர்வ மொழிகளுக்குப் பொறுப்பான புதிய மத்திய அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller), கியூபெக்கில் பிரெஞ்சு மொழியின் நிலை குறித்த தீவிரமான விவாதங்கள் தன்னை சலிப்படையச் செய்துள்ளதாகக் கூறியது, கியூபெக் மாகாண அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
மத்திய அமைச்சர் மில்லர் வெளியிட்ட கருத்துக்களுக்காக, கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மார்க் மில்லரை “அனைத்து கியூபெக் மக்களுக்கும் ஒரு மானக்கேடு” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault), “அவர் இத்தகைய அபத்தமான கருத்துக்களைக் கூறிய பின்னர், கியூபெக்கில் நடைபெறும் ஒரு கலாசார நிகழ்வில் எப்படி முகம்காட்டப் போகிறார் என்று தெரியவில்லை,” என்றும் குறிப்பிட்டுல்ளார்.
பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதைத் தமது அரசாங்கத்தின் மையக் கொள்கையாகக் கொண்டுள்ள லெகோ, 2022 ஆம் ஆண்டில் Bill 96 எனும் கடுமையான சட்டத்தை அமுல்படுத்தினார்.
இந்த சட்டம், வணிகங்கள் மற்றும் பொதுச் சேவைகளில் பிரெஞ்சு மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
