பேருவளை, லைட் ஹவுஸ் தீவில் இலங்கை கடலோர காவல்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 4 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ரூ. 68 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
