கியூபெக் அரசாங்கம் பொதுமக்களுக்காக வெளியிடும் அனைத்து வெளியீடுகள் மற்றும் தொடர்பாடல்களில் அனைத்து பாலினத்தவர்களுக்கும் சமத்துவமான (Gender-inclusive) பிரெஞ்சு எழுத்து நடையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மொழிக்கான அமைச்சர் Jean-François Roberge, இந்த புதிய கொள்கையை நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, கியூபெக் அமைச்சுகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் முதலானவை, இனிமேல் iel, toustes, celleux, mix அல்லது froeur போன்ற அனைத்து பாலினத்தவர்களுக்கும் சமத்துவமான சொற்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஆண்பால் மற்றும் பெண்பால் வடிவங்களை இணைத்து எழுதப்படும் சுருக்கப்பட்ட இரட்டைக் குறியீடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் அரசாங்கத்தின் இந்த முடிவு, திருநங்கை உரிமைக் குழுக்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
