Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஈஸ்ட்வே டேங்க் நிறுவனத்தின் உரிமையாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

செப்டம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஓட்டவா நகரில் 2022ஆம் ஆண்டு ஆறு பேரின் உயிரிழப்புக்குக் காரணமான தொழிற்சாலை வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஈஸ்ட்வே டேங்க் நிறுவனத்தின் உரிமையாளர் நீல் கிரீன் மீது காவல்துறை கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த வழக்கில், நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக ஆறு பிரிவுகளின் கீழும், காயங்களை ஏற்படுத்தியதாக ஒரு பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி ஓட்டவாவில் உள்ள மெரிவேல் சாலையில் அமைந்திருந்த ஈஸ்ட்வே டேங்க், பம்ப் அண்ட் மீட்டர் (Eastway Tank, Pump and Meter) என்ற டேங்கர் டிரக் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த வெடிப்பில், டேன்னி பீல், ரிக் பாஸ்டியன், காயலா ஃபெர்குசன், எட்டியென் மபியாலா, ரஸ்ஸல் மெக்லெலன் ஆகிய ஐந்து ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்றொரு ஊழியர் மேட் கெர்னி, மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, சக ஊழியரான டேனர் கிளெமென்ட் என்பவர் அந்த விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினார்.

சம்பவம் நடந்த 3½ ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் உரிமையாளரான நீல் கிரீன்  கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஓட்டவா காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்ட போதும், சட்ட சிக்கல்களும், வழக்கின் விசாரணையில் ஏற்பட்ட பிழைகளும் இந்த விசாரணையை பல மாதங்கள் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி கியூபெக்கில் மின்சாரப் பேருந்துகளின் சேவையை இடைநிறுத்த திட்டம்
அடுத்த செய்தி விரைவுத் திட்ட ஒப்புதல் செயல்முறையை பாராட்டினார் டேனியல் ஸ்மித்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

காட்டுத்தீயை கட்டுப்படுத்த நீர் குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பி வைப்பு

ஆகஸ்ட் 7, 2025
கனடாவிசேட செய்திகள்

அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்க திட்டம்

ஜூன் 1, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத் தேர்தலில் பார்ட்டி கியூபெக்வா’வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கே பேரழிவு -டக் ஃபோர்ட்

ஜனவரி 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு உத்தரவு பிறபிப்பு

செப்டம்பர் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?