பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவிற்கும் அமெரிக்க அதிபர் மற்றும் பிரதி நிதிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை தொடர்ந்து ஏப்ரல் 2 ஆம் தேதி வரை சில கனேடிய பொருட்களுக்கான வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார்
இது 25 சதவீத வரியிலிருந்து சுமார் ஒரு மாத கால நிவாரணத்தை கனடாவிற்கு வழங்குகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் வரி விலக்கு கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்திற்கு (CUSMA) இணங்கும் கனேடிய ஏற்றுமதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் – குறித்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு வெளியே அமெரிக்காவிற்கு விற்கப்படும் பொருட்களுக்கு அல்ல எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 62 சதவீதம் “கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்திற்கு இணக்கமாக இல்லை” என்பதால், 25 சதவீத வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது,
ஃபெண்டானில் மற்றும் எல்லையுடன் பிணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உலகளாவிய கட்டணத்திலிருந்து கனடா குறைந்தபட்சம் தற்காலிக இடைவெளியைப் பெறுகிறது என்றாலும், அடுத்த வாரம் அனைத்து இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கும் முன்னர் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரியை முன்னெடுத்துச் செல்வதாக டோன்லட் டிரம்ப் இன்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு இரண்டு உலோகங்களையும் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடு கனடா என்பதும் குறிப்பிடத்தக்கது.