அமெரிக்க மாநிலங்களால் வாங்கப்பட்ட மாகாண ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான 25% கூடுதல் வரியை ஒன்ராறியோ நிறுத்தி வைத்துள்ளது
அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பின்பு , அமெரிக்க வர்த்தகச் செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாக ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
சில அமெரிக்க மாநிலங்களுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதில் 25 சதவீத கூடுதல் வரியைச் சேர்ப்பதாக ஒன்ராறியோ அறிவித்த நிலையில் தனது வாக்குறுதியை நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு சற்று முன்னர் தெரிவித்தார்.
டக்ஃபோர்டு மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ” ஆகியோருக்கிடையில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான பொருளாதார உறவு குறித்துஆரோக்கியமான உரையாடலை” நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ,ஒன்ராறியோ முதல்வர் “டக் ஃபோர்ட்டினால் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்று(செவ்வாயன்று) குயின்ஸ் பூங்காவில் செய்தியாளர்களிடம் கருது வெளியிட்ட டக் ஃபோர்ட் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தொடர்ச்சியான கட்டண அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து “எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க” மாகாண மற்றும் மத்திய கனேடிய அதிகாரிகள் வாஷிங்டனில் சந்தித்து ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு லுட்னிக் அழைப்பு விடுத்ததாக கூறினார்.
அவர்கள் எதிர் வரும் வியாழக்கிழமை சந்தித்து பேச உள்ளனர் என ஃபோர்ட் மேலும் தெரிவித்தார் – அதற்கு ஈடாக, மிச்சிகன், நியூயார்க் மற்றும் மினசோட்டாவிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கான 25 சதவீத கூடுதல் வரியை நிறுத்தி வைக்க ஒன்ராறியோ ஒப்புக்கொண்டதாகவும் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு சற்று முன்னர் தெரிவித்தார்.