பிரதமர் மார்க் கார்னியின் புதிய விரைவுத் திட்ட ஒப்புதல் செயல்முறைக்கு அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது, மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே ஒரு புதிய ஒத்துழைப்புக்கான அறிகுறியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி, நாட்டின் நலனுக்கு அவசியமானதாகக் கருதப்படும் ஐந்து முக்கிய திட்டங்களின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் அல்பர்ட்டா மாகாணம் எதிர்பார்த்த எண்ணெய் குழாய் திட்டம் இடம்பெறவில்லை
எனினும், இயற்கை எரிவாயு தொடர்பான திட்டங்கள் சேர்க்கப்பட்டிருப்பது ஆல்பர்ட்டா மாகாணத்திற்கு ஒரு நல்ல தொடக்கம் என அல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
எட்மண்டன் நகரில் பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மித், இதுவரையில் எந்தவொரு பிரதமருடனும் இல்லாத அளவுக்கு மார்க் கார்னியுடன் தனக்கு அதிக ஒத்த கருத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளார்.


