கனடா தயாரிக்கும் அனைத்து விமானங்களுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அந்த விமானங்களின் மீது 50% கூடுதல் வரி விதிக்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை உலக வர்த்தகச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ‘கல்ப்ஸ்ட்ரீம்’ (Gulfstream) நிறுவனத் தயாரிப்பான அதிநவீன ஜெட் விமானங்களை, கனடா தனது நாட்டு வான்பரப்பில் பறக்க அனுமதி அளிக்க (Certification) மறுப்பதே இந்த பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகும்.
அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்பத்தில் உருவான கல்ப்ஸ்ட்ரீம் 500 ரக மற்றும் 600 ரக விமானங்களுக்கு கனடா தடைவிதித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, கனடாவின் ‘பாம்பார்டியர்’ (Bombardier) நிறுவன விமானங்களை அமெரிக்காவில் தாம் தடை செய்வதாக ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
