ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் அரசாங்கம், புதிய மற்றும் சர்ச்சைக்குரிய சுரங்கச் சட்டமான ‘பில் 5’ (Bill 5) ஐ நிறைவேற்றியுள்ளது.
‘எமது பொருளாதாரத்தை விடுவிப்பதன் மூலம் ஒன்ராறியோவைப் பாதுகாக்கும் சட்டம்’ (Protect Ontario by Unleashing Our Economy Act) என அழைக்கப்படும் இந்த சட்டம், குறிப்பிட்ட பொருளாதாரத் திட்டங்களுக்காக மாகாண மற்றும் உள்ளூராட்சிச் சட்டங்களை இடைநிறுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
இதேவேளை, இந்த சட்டம், தமது உரிமைகளையும், கவலைகளையும் புறக்கணிப்பதாகக் கூறி, கனடாவின் பூர்வீகக் குடிகளிடம் கடும் எதிர்ப்பையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.
நேற்றைய தினம் பிற்பகலில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது, சட்டசபையில் கூடியிருந்த பல பூர்வீகக் குடி உறுப்பினர்கள் கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான இறுதி வாக்கெடுப்பின் போது ஒன்ராறியோ முதல்வர் ஃபோர்ட் சபைக்கு வரவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது.
