மத்தியகிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக டொரோண்டோவிலுள்ள மிகப்பெரிய உணவு வங்கியான “டெய்லி பிரட்” (Daily Bread Food Bank) கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
கொரோனா காலப்பகுதிக்கு பின்னர் டெய்லி பிரட் வங்கியை அதிகளவானோர் நாடினர். தற்போது அதன் எண்ணிக்கை வீழ்ச்சியை கண்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் உணவை கொண்டு செல்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவ்வுணவு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் ஹெதரிங்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 9,20,000 இட்கும் அதிகமான முறை பொதுமக்கள் இந்த உணவு வங்கிக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஹதரிங்டன்,
உணவு வங்கிக்காக அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த கப்பல் ஈரான் அருகே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இதனால் உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.



