இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் நாளை காலை 9 மணிக்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அமைதி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த போராட்டம் தொடர்பில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் எரிபொருளை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் விநியோகிப்பதில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படவுள்ளது.
