Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த 5 புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் – உயர்ஸ்தானிகர்!

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கான ஐந்து புதிய வெளிநாட்டுத் தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் முதன்முதலில் நிறுவப்பட்ட கசகஸ்தான் தூதரகத்திற்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சேர்கெய் விக்டோரோவும் நற்சான்றிதழ்களை கையளித்த இராஜதந்திரிகளில் அடங்குகிறார். இலங்கையில் தனது தூதரகத்தைத் திறந்த முதல் மத்திய ஆசிய நாடு கசகஸ்தான் ஆகும்.

இது தவிர, எரித்திரியா இராஜ்ஜியம், உஸ்பெகிஸ்தான் குடியரசு, ஜோர்தானின் ஹசேமைட் இராஜ்ஜியம், பூட்டான் இராஜ்ஜியம் என்பவற்றுக்கான தூதுவர்களும் பிஜி குடியரசின் புதிய உயர்ஸ்தானிகரும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தங்கள் நற்சான்றிதழ்களை கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் விபரம் பின்வருமாறு:

01. அலெம் வோல்டெமரியம் (Mr. Alem Woldemariam) – புது டில்லிக்கான எரித்திரியா இராஜ்ஜிய வதிவிடத் தூதுவர்

02. ஜக்ன்நாத் சாமி (Mr. Jagnnath Sami) – புது டில்லிக்கான பிஜி குடியரசின் வதிவிட உயர் ஸ்தானிகர்,

03. அலிஷர் டுக்டாயாவ் (Mr. Alisher Tukhtaev) – இஸ்லாமாபாத்திற்கான உஸ்பெகிஸ்தான் குடியரசின் வதிவிடத் தூதுவர்

04. யூசப் முஸ்தபா அப்டெல்கானி (Mr. Yousef Mustafa Abdelghani) – புதுடில்லிக்கான ஜோர்டான் இராஜ்ஜிய வதிவிடத் தூதுவர்

05. சேர்கெய் விக்டோரோவ் (Mr. Sergey Viktorov) – கொழும்புக்கான கசகஸ்தான் குடியரசின் வதிவிடத் தூதுவர்

06. டாஷோ கர்மா ஹாமு டோர்ஜி (Ms. Dasho Karma Hamu Dorjee) – டாக்காவுக்கான பூட்டான் இராஜ்ஜிய வதிவிடத் தூதுவர்

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி இலங்கை – துருக்கி பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டுக் குழுவின் 3வது அமர்வு இன்று!
அடுத்த செய்தி ஒட்டாவா டிரக் அணிவகுப்பு போராட்ட தலைவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

ஜூலை 10, 2026
இலங்கை

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன் – சிறிதரன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு வந்தாறுமூலையில் குரங்கு கடித்ததில் 6 பெண்கள் படுகாயம்!

ஜூலை 22, 2025
இலங்கை

யாழில் டெங்கு பரவும் சூழலை பேணிய வீட்டின் குடியிருப்பாளர்களுக்கு அபராதம்!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?