Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா டிரக் அணிவகுப்பு போராட்ட தலைவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஜூலை 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒட்டாவா டிரக் அணிவகுப்பு போராட்டத்தின் முக்கிய தலைவர்களான தமரா லிச் (Tamara Lich) மற்றும் கிறிஸ் பார்பர் (Chris Barber) ஆகியோருக்கு முறையே ஏழு மற்றும் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு, கனேடிய அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

இந்த தண்டனைக் கோரிக்கையை “கொடூரமான மற்றும் அசாதாரணமான தண்டனை” என்று பிரதிவாதிகள் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையில், கிறிஸ் பார்பர் குழப்பம் விளைவித்தல் (mischief) மற்றும் நீதிமன்ற உத்தரவை மீற மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

தமரா லிச் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மட்டும் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.

2022 ஆம் ஆண்டு இவர்களால் ஒட்டாவாவில் முன்னெடுக்கப்பட்ட டிரக் அணிவகுப்பு போராட்டத்தின் காரணமாக லொறிகள் ஒட்டாவா நகரத்தை ஆக்கிரமித்தன.

இதனையடுத்து மூன்று வாரங்களுக்கும் மேலாக, ஒட்டாவா நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அதன் காரணமாக லட்சக்கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும், ஒட்டாவா குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கனேடிய அரச தரப்பு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமரா லிச் (Tamara Lich) மற்றும் கிறிஸ் பார்பர் (Chris Barber) ஆகிய இருவரும் அந்த போராட்டத்தின் முக்கிய தலைவர்களாக செயல்பட்டு, சட்டத்தை மீறி, ஒட்டாவா நகரத்தை முடக்கிய “தொடர்ச்சியான குற்றச் செயலுக்கு” பொறுப்பு என்று, கனேடிய அரச தரப்பு தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

இந்த வாதத்திற்கு எதிராக, கிறிஸ் பார்பரின் வழக்கறிஞர் டயான் மகாஸ் தமது வாதங்களை நீதிபதியின் முன்னால் சமர்ப்பித்துள்ளார்.

தமரா லிச்சின் வழக்கறிஞர் லாரன்ஸ் கிரீன்ஸ்பான் (Lawrence Greenspon) தமது தரப்பு வாதங்களை விரைவில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய செய்தி ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த 5 புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் – உயர்ஸ்தானிகர்!
அடுத்த செய்தி கல்வியின் சுமை மாற்றப்படும் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்டிமீட்டர் வரை பொழிந்த பனிமழை!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

ஏப்ரல் 2ம் திகதிக்கு பின் தொடருமா கனேடிய பொருட்களுக்கான வரி?

மார்ச் 6, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அமெரிக்காவின் உதவி

ஏப்ரல் 13, 2024
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் ஆசிரியர்கள் தொழிற்சங்கம் மாகாண அரசாங்கத்திற்கு அவசர அழைப்பு

டிசம்பர் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?