Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணிக்கு சர்வதேச நிபுணர்களை அழைத்து வாருங்கள் – எம்.ஏ. சுமந்திரன்

ஆகஸ்ட் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கூடிய ஏது நிலைகள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி புதைகுழி வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான சுமந்திரன் குறித்த விடயத்தை மன்றில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது

புதைகுழி அகழ்வு பணிகளில் சர்வதேச நிபுணத்துவ உதவிகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மரபணு சோதனைகளை முன்னெடுக்கவேண்டும்.

தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் வேளைகளில் , குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , பாதிக்கப்பட்ட தரப்பினர் , மயான அபிவிருத்தி சபையினர் உள்ளிட்ட தரப்புகளிடம் வாக்கு மூலங்களை பெற்று வருவது அச்சுறுத்தும் செயற்பாடாகும் எனவே குற்ற புலனாய்வு பிரிவினர் அவ்வாறான செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.

செம்மணியில் மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டு , பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ளது. அந்த வழக்கினை யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு மாற்றி , தற்போது நடைபெறும் செம்மணி புதைகுழி வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும்.

அந்த வழக்கில் கைதாகி பிணையில் உள்ள இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கூடிய ஏது நிலை காணப்படுவதால் , அந்த வழக்கு , செம்மணி புதைகுழி வழக்குடன் இணைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பில் மன்றில் எழுத்துமூல சமர்ப்பனங்களை முன் வைக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

முந்தைய செய்தி மொரட்டுவ – பிலியந்தல பகுதியில் ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!
அடுத்த செய்தி வனவிலங்கு சரணாலயத்தில் திடீர் தீ விபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

லீக் கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போர்த்துக்கல் அணி

ஜூன் 5, 2025
இலங்கை

“ஆட்சி மாறினாலும் அச்சுறுத்தல்கள் மாறவில்லை” யாழில் அதிகரிக்கும் பொலிசாரின் கெடுபிடிகள்!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

ஏப்ரல் 1, 2026
இலங்கை

இலங்கை நாணய பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

செப்டம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?