இலங்கை பிரிமியர் லீக் போட்டியானது தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கண்டி பெல்கன்ஸ் அணியின் தலைவரான வனிந்து ஹசரங்கவிற்க்கு அபராதமாக ரூபா 11 இலட்சம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கு கொள்ளும் சகல அணிகளுக்கும் வழங்கப்பட்ட நிறத்திலேயே அவர்களுடைய ஆடைகள் அமைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வனிந்து ஹசரங்க கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொண்ட போட்டியின் போது வேறு இலட்சினை பதித்த தலைகவசம் ஒன்றை அணித்திருந்தார்.
குறித்த தலைக்கவசத்தை அணிய வேண்டாம் என நடுவர் ரோலி பிளாக் கூறிய போதிலும் அதனை கவனத்தில் கொள்ளாது இருந்தமையால் வனிந்து ஹசரங்கவிற்க்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.