சவுதி அரேபியாவின் தைஃப்பின் அல்ஹடா பகுதியிலுள்ள பொழுதுபோக்கு பூங்காவிலிருந்த இராட்டின சவாரி ஒன்று பழுதடைந்து இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு மற்றும் அவசர சேவைகள் விரைவாக பதிலளித்தாகவும் அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோளாறுக்கான சரியான காரணத்தைக் கண்டறிய அவசர விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


