யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் இன்றும்புதிதாக 3 மனித எச்ச தொகுதிகள் அடையாளம் காணப்படுள்ளது. மனித புதைகுழிகளில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 26ஆவது நாளான இன்று , . ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 3 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.
இதன்படி, இதுவரை மொத்தம் 118 மனித எச்சங்கள் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 105 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்படுகின்றன.


