யாழ்ப்பாணத்தில் பட்டம் ஏற்றிய இளைஞன் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல் வெளி ஒன்றில் நேற்றைய தினம் இளைஞன் பட்டம் ஏற்றிய போது விஷ பாம்பொன்று தீண்டியுள்ளது.
அதனை அடுத்து இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.